Sunday, 30 October 2011

என் டைரியிலிருந்து..6

என் கண்மணி
என்னை
கவிதை எழுதச்சொன்னாள்.
இனியவளே !
நிறைகுடம் நீர் கொள்ளுமா?.
என் நெஞ்சில்
அழகான கவிதையாய்   நீ -
நிறைந்துள்ள போது
இன்னொரு கவிதைக்கு
நான்
எங்கு போவேன்?!
                      at 1993..

என் டைரியிலிருந்து..5

காதலென்பது....
                       ஆணும் பெண்ணும்  தங்களது விருப்பு வெறுப்புகளை ஒருவர்க்கொருவர் விட்டுக்கொடுப்பது...


காதலென்பது...
                     கனவுகளை நிஜங்களாக்க முயலுவது போல் கனவு காண்பது..


காதலென்பது..
                    உன்னை காதலிப்பது...!
                    

என் டைரியிலிருந்து..4

வாடிக்கிடந்தவன்
மனதில்
பூவைக்கொட்டிவிட்டு
எங்கே சென்றாய்
என் கண்மணி?
உடனே வாயேன்!
உன்னைக்காணாமல்
நீரைப் பிரிந்த
மீன் போல்.....

என்  இதயம்!


                 1993 ல் ஒரு நாள்

Saturday, 29 October 2011

என் டைரியிலிருந்து.....3

காதலுக்கு இலக்கணம்
எத்தனையோ பேர்
எத்தனையோ
கூறியுள்ளனர்.

என்னைக்கேட்டால்..

ஒரே வரியில்
உன் பெயரை மட்டும்
சொல்லிட
ஆசைப்படுவேன்!

                    1993 ல் ஒரு இனிய மாலையில்...

                           

என் டைரியிலிருந்து.......2

என்னைப் பற்றி  
 நான்
எண்ணிப்பார்த்ததேயில்லை.....

உன்னைக் காணும் வரையில்!

என்னைப் பற்றி
நான்
எண்ணிப்பார்த்ததேயில்லை!
                                 - உன்னவன்

1993 ல் ஒரு நாள்.

என் டைரியிலிருந்து......1

என் ப்ரியத்திற்குரியவளே!

                                     மனதில் தோன்றி வெள்ளமாக பாயும் உணர்வுகளை வார்த்தைக்கு அகப்பட்டதை மட்டும் வரிவடிவமாகியிருக்கிறேன். இது வடிகட்டியில் தங்கும் கசடுகளைப் போல் வார்த்தைக்கு சிக்கிய எண்ண்ங்கள் மட்டுமே!. இதை தவிர எண்ணிலடங்கா எண்ணங்கள்.

         இதை உணரத்தான் முடியும்.........
                             
                           .......... உன்னால் மட்டும்!.

                                                             1993 வருடத்தில் ஒர் நாள்.